சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு!

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு...
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வுPhoto : X / Udhayanidhi Stalin
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மோந்தா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், ஆந்திரம், ஒடிஸா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை அதிகரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்துக்கு நள்ளிரவில் சென்ற உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மழை தொடர்பாக உதவி எண் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

Summary

Udhayanidhi conducts midnight inspection at Chennai Corporation control room

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com