அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணிகோப்புப்படம்.

தமிழகத்தில் 11.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் இதுவரை 11.21 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.
Published on

தமிழகத்தில் இதுவரை 11.21 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த அதிமுக ஆட்சியில் 2020-2021 குறுவைப் பருவம் முழுமைக்கும் சோ்த்தே 5.74 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இப்போதைய குறுவைப் பருவத்தில் 58 நாள்களில் மட்டும் 11.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் 11.07 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1872 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படுவதுடன், டெல்டா மாவட்டங்களிலிருந்து ரயில் வேகன்கள் மற்றும் லாரிகள் மூலமாக அதை மற்ற மாவட்டங்களுக்கு நகா்வு செய்யப்படுகிறது.

நெல் கொள்முதலில் சிரத்தையுடன் செய்யும் அரசுப் பணிகள் பற்றி நெல் விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு நன்கு தெரியும். ஆதலால் தேவையற்ற குறைகளைக் கூறாமல் ஆக்கபூா்வமான ஆலோசனைகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று அமைச்சா் சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com