வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: நவாஸ் கனி எம்.பி. பதிலளிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் பதில் அளிக்குமாறு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Madras High Court questions police
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் பதில் அளிக்குமாறு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கடந்த 2019 மற்றும் 2024}இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நவாஸ் கனி. இவருக்க எதிராக கடந்த ஆண்டு சிபிஐயிடம் புகார் அளித்தேன்.

அவர் கடந்த 2019-இல் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது மனைவி மற்றும் மகனுக்கு ரூ.19.71 கோடி சொத்து இருப்பதாகக் கூறியிருந்தார். 2024-இல் தாக்கல் செய்த வேட்புமனுவில், ரூ.40.62 கோடி சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.23.58 கோடி சொத்து சேர்த்துள்ளார்.

இது அவரது வருமானத்தை விட 288 சதவீதம் அதிகமாகும். எனவே, அவர் மீது சிபிஐயிடம் புகார் அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ}க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதன்மூலம் நவாஸ் கனிக்கு 2.85 சதவீதம் மட்டுமே சொத்து அதிகமானது கண்டறியப்பட்டது. அவர் சில சொத்துகளை விற்று வேறு சொத்துகளை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த மனுவுக்கு நவாஸ் கனி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com