

கபடியில் தங்கம் வென்ற அபிஷேனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கப்பதக்கத்தை வென்றன.
இரு அணிகளிலும் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கப்பதக்கத்தை வெல்ல பெற பெரும் பங்கை வகித்தனர்.
சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலை இல்லத்திற்கு பதக்கம் வென்ற கார்த்திகாவை அழைத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று(அக்.29) அபினேஷை தனது இல்லத்திற்கு அழைத்து எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு ரூ. 1லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.