பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தேவர் நினைவிடம்
தேவர் நினைவிடம்
Published on
Updated on
1 min read

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படும் நிலையில், அதிமுக சார்பில் கட்சிப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் இன்று காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று காலை பசும்பொன் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, டி. ஜெயக்குமார், விஜய பாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அதிமுக எம்எல்ஏக்களும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Summary

Edappadi Palaniswami paid his respects at the memorial of Pasumpon Muthuramalinga Thevar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com