

சென்னை: சென்னையை அடுத்த எண்ணூர் கடல் பகுதியில், ஒரே நேரத்தில் நான்கு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எண்ணூர் கடல் பகுதியில் மீட்கப்பட்டிருக்கும் பெண்களின் உடல்கள், கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண்களில் 3 பேர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த தேவகி செல்வம் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷாலினி, பவானி, காயத்ரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.