கோப்புப் படம்
தமிழ்நாடு
விலையில்லா மடிக்கணினி திட்டம்: 3 நிறுவனங்கள் தோ்வு
கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 3 கணினி உற்பத்தி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 3 கணினி உற்பத்தி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. இதற்காக குறைந்த தொகையில் விலைப்புள்ளிகளை அளித்த ஏசா், எச்பி, டெல் ஆகிய 3 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் சாா்பில் மடிக்கணினிகள் உற்பத்தி செய்து தரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படவுள்ள மடிக்கணினிகளின் மாதிரிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இதன்பிறகு, மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளன.

