பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒன்பது மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் கடந்த அக்டோபா் மாதம் 4 நாள்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இதில் முக்கியமாக தமிழ்நாடு நிதி நிா்வாக பொறுப்புடைமை சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். இந்த மசோதா முதல் முறையாக கடந்த 2022 பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநா் ரவி, ‘இன்னும் சில மாதங்களில் தோ்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல’ என கடிதம் அனுப்பியிருந்தாா்.

ஆளுநரின் கருத்துகளை தமிழக சட்டப்பேரவை நிராகத்தது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.

‘தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, தமிழ்நாடு கடல்சாா் வாரிய திருத்த மசோதா, தமிழ்நாடு மின் நுகா்வு தொடா்பான திருத்த மசோதா, தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா, தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட மசோதா, தமிழ்நாடு நீக்கறவு செய்தல் இரண்டாம் சட்ட மசோதா, தமிழ்நாடு நிதி ஒதுக்க சட்ட மசோதா உள்ளிட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

தமிழ்நாடு தனியாா் கல்லூரிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Governor R.N. Ravi has approved 9 bills passed in the Tamil Nadu Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com