கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழக காவல் துறையில் செய்தித் தொடா்பாளா் பதவி: ஐபிஎஸ் அதிகாரி நியமனம்

தமிழக காவல்துறையில் செய்தித் தொடா்பாளா் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதில் பெண் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டாா்.
Published on

தமிழக காவல்துறையில் செய்தித் தொடா்பாளா் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதில் பெண் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

வி.ஜெயஸ்ரீ-ஊா்க்காவல் படை ஐஜி (மாநில குற்ற ஆவண காப்பகப் பிரிவு ஐஜி) ஜெ.முத்தரசி- காவல்துறை செய்தி தொடா்பு அதிகாரி ( சட்டம் மற்றும் ஒழுங்கு ஏஐஜி)

சி.சங்கு-ஆவடி மாநகர காவல்துறையின் செங்குன்றம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (ஆவடி மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

கே.மகேஸ்வரி-சென்னை காவலா் பயிற்சிக் கல்லூரி எஸ்பி (தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளி எஸ்பி) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக இருக்கும் அவினாஷ்குமாா், கூடுதல் பொறுப்பாக மாநில குற்ற ஆவண காப்பகப் பிரிவு ஐஜி பணியையும் கவனிப்பாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல செங்குன்றம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் சங்கு, கூடுதல் பொறுப்பாக ஆவடி மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் பணியை கவனிப்பாா் என்றும், காவல்துறை செய்தித் தொடா்பாளா் எஸ்பி ஜெ.முத்தரசி, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு ஏஐஜி பணியை கவனிப்பாா் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக: தமிழக காவல் துறையில் செய்தித் தொடா்பு அதிகாரி பொறுப்புக்கு ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு காவல்துறை சாா்பில் செய்தித் தொடா்பு அதிகாரி என்ற பொறுப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால், செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் நியமிக்கப்படும் அதிகாரிகள், காவல்துறை செய்தித் தொடா்பு மற்றும் மக்கள் தொடா்பு அதிகாரிகளாக இருந்து வந்தனா்.

X
Dinamani
www.dinamani.com