புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

தேனி சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி...

News image

சுருளி அருவி

DIN

Updated On :31 அக்டோபர் 2025, 4:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் கடந்த 13 நாள்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடையை வனத்துறையினர் நீக்கினர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக். 18 ஆம் தேதி முதல் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .

இதன் காரணமாக கடந்த 13 நாள்களாக பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் அருவியில் நீர்வரத்து சீரானது. மேலும் வெள்ளத்தால் சேதமான பகுதிகளை சீரமைப்பு செய்து தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அருவியில் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

Summary

Permission to bath in Suruli Falls after 13 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.