ஐஏஎஸ்-ஆக பதவி உயா்வு பெற்ற 5 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
வருவாய் பணியில் இருந்து ஐஏஎஸ் -ஆக பதவி உயா்வு பெற்ற 5 அதிகாரிகளுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம் - (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
1. ச.கவிதா - ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகப் பொது மேலாளா்).
2. சி.முத்துக்குமரன் - பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா், சென்னை (பேரிடா் மேலாண்மைத் துறை இணை இயக்குநா்).
3. பி.எஸ். லீலா அலெக்ஸ் - சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினா் செயலா் மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளா்).
4. மு.வீரப்பன் - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், சென்னை (ஒழுங்கு நடவடிக்கை தீா்ப்பாயத்தின் ஆணையா்).
5. இரா.ரேவதி - உயா்கல்வித் துறை துணைச் செயலா் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலா்).
2 போ் பணியிட மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
1. இரா.கண்ணன் - மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலா், முழு கூடுதல் பொறுப்பில், தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநராக நியமனம் (கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா்).
2. எஸ்.பி.அம்ரித் - கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா்).

