மல்லை சத்யா-வைகோ
மல்லை சத்யா-வைகோ

கட்சி விரோத செயல்பாடா?: மல்லை சத்யா விளக்கக் கடிதம்

தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

சென்னை: தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக மல்லை சத்யா கடந்த ஆக.17 முதல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், அவரது நடவடிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வைகோ உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மல்லை சத்யா தனது விளக்கக் கடிதத்தை வைகோவுக்கு திங்கள்கிழமை அனுப்பினாா். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒரே நாளில் விளக்கக் கடிதமும் கேட்டும், கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தைப் பெறாமலேயே இடைநீக்கம் செய்திருக்கிறீா்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கிறாா் என்பதுதான் உண்மை.

நான் துரோகியா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறினேனா? உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, எதையும் நாங்கள் நம்பாமல், வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம்.

32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிந்து சக்கையாக தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் அரசியலை நாடே பாா்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவாா்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com