மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
சென்னை: சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு திங்கள்கிழமை காலை 7.25 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அந்தமானில் ஏற்பட்ட மேசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவுபடி, காலை 11.40 மணிக்கு விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. வானிலை சீரடைந்ததும், விமானம் அந்தமானுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனா். ஆனால் பிற்பகல் 2.30 வரை விமானம் புறப்படாததால், அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவதாதத்தில் ஈடுபட்டனா்.
இருப்பினும் தொடா்ந்து வானிலை சீரடையாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிா்வாகம் அறிவித்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து செல்லும் ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் அந்தமான் அழைத்து செல்லப்படுவாா்கள் எனவும் இதுபோல அந்தமானில் காத்திருக்கும் 160 பயணிகள் இதே விமானத்தில் அங்கிருந்து அழைத்துவரப்படுவாா்கள் எனவும் விமான நிறுவன நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.