
2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
"விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலில் நின்று வென்று இலக்கை எப்படி அடைகிறார், எவ்வாறு செயல்படுகிறார் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
இதுவரை யாரும் என்னுடன் கூட்டணிக்காக பேசவில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானால் நடக்கலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், "எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதிலேயே பதிலும் இருக்கிறது.
பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அதிமுக ஒன்றிணைய வேண்டுமென சசிகலா கொடுத்த அறிக்கையை மனமார வரவேற்கிறேன். அதற்கு வலுசேர்க்கும் வகையில் செயல்படுகிறேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.