

பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு உளமார மரியாதை செலுத்துகிறது.
தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.
அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன.
அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான #வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.