Special train
விரைவு ரயில்கோப்புப்படம்

இன்று விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.
Published on

சென்னை: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப். 2, 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.40 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்படும்.

இதேபோல், செப். 2, 6, 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதே நாள்களில் விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரத்துக்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com