
கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது.
இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்கள் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே ஓணம் கொண்டாட்டம் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தொடங்கி விட்டது.
வெளிநாடுகளுக்கு அனுப்ப விமான நிலையம் வந்திருக்கும் பூக்களில் தங்க மஞ்சள் சாமந்தி, வெண் கிரிஸான்தமம், ஊதா வாடாமல்லி, வெள்ளை சம்பங்கி, துளசி, ரோஜா, மதுரை மல்லி உள்ளிட்ட பல்வேறு வகைப் பூங்கள் அடங்கும்.
இந்த பூக்கள் ஓணத்தின் முக்கிய பாரம்பரியமாக உள்ள பூக்கோலங்கள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து நேந்திரம் மற்றும் பல்வேறு பழங்களும் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், ஓணம் பண்டிகை கலைக்கட்டி உள்ளது.
வழக்கமாக, ஓணம் பண்டிகையின்போது பல டன் மலர்களும் பழங்களும் தமிழகத்தின் ஒரு சில விமான நிலையங்களிலிருந்தும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பல உலக நாடுகளுக்கும் ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.