
தமிழக பாஜக தலைவர்களுக்குள் உள்கட்சிப் பூசல் நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீர் பயணமாக புதன்கிழமை தில்லி செல்லவுள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அறிவித்துள்ளது.
இதனிடையே, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு, உள்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு என்று பாஜக தலைவர்களும் தனித்தே ஆட்சி என்று அதிமுக தலைவர்களும் தொடர்ந்து இருவேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் புதன்கிழமை பாஜகவின் தேசிய உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே, தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களை நாளை தில்லிக்கு வர கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாளை தில்லி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் நடைபெறும் ஆலோசனையில் உள்கட்சிப் பூசல், அதிமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.