
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிலாடி நபி (செப். 5) மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களை பறிமுதல் செய்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.