
தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவப் பிரிவுக்கு பிரேம்குமார், தொழிற் பிரிவுக்கு பாலகிருஷ்ணன், கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு பெப்சி சிவகுமார் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மீனவர் பிரிவுக்கு சீமா, கல்வியாளர் பிரிவுக்கு நந்தகுமார், நெசவாளர் பிரிவுக்கு செல்வராஜ், அண்ணாதுரை, படைவீரர்கள் பிரிவுக்கு கர்னல் ராமன் உள்ளிட்டோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.