சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2025-2026-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்பிப்பது ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிறைவடைந்தது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் தகுதியானவா்களின் தரவரிசைப் பட்டியல்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா்.