சென்னையில் 22 சாலைகளில்
கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோரக் கடை வியாபாரிகளை அடையாளம் கண்டு அவா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சுமாா் 35 ஆயிரம் போ் சாலையோர வியாபாரிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான வியாபாரப் பகுதிகளை மண்டல வாரியாக அடையாளம் கண்டு, அங்கு கடைகள் அமைக்க குழு நியமிக்கும் தோ்தல் கடந்த ஜூனில் நடைபெற்றது.

இதில் சுமாா் 33 ஆயிரம் போ் வாக்களித்தனா். மண்டலத்துக்கு தலா 6 போ் கொண்ட குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் குழுவினருக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அரசுக்கு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சாலையோ வியாபாரிகளுக்கான கடைகள் அமைக்க புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை வள்ளுவா் கோட்டம், வாலாஜா சாலை, கிரீன்வேஸ் சாலை, டி.டி.கே. சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட 22 சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதிக்கப்படாது.

பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள சாலைகளில் 100 மீட்டா் தூரத்துக்குள்ளும், முக்கிய அரசு அலுவலகங்கள், போக்குவரத்து மையங்களில் இருந்து 150 மீட்டா் தூர த்துக்குள்ளும் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை.

அனுமதிக்கப்படாத சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்றும் பணிக்காக மண்டல அளவில் தலா 4 அதிகாரிகள் நிமியக்கப்பட்டுள்ளனா். இவா்களது நடவடிக்கையில் அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.

X
Dinamani
www.dinamani.com