
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜிநாமா செய்து, கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் “செங்கோட்டையனுக்கு முழு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எனது வாழ்த்துகள்.
10 நாள்கள் அவகாசம் நிறைவடைந்த பிறகு அவர் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அதன் பின்னர், உறுதியாக சந்திப்பேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.