சந்திர கிரகணம் முடிவுற்றது!

வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தோன்றி, யாமத்தில் முடிவுற்றது.
அடர் சிவப்பில் சந்திரன்
அடர் சிவப்பில் சந்திரன்AP
Published on
Updated on
1 min read

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தோன்றி, யாமத்தில் முடிவுற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 1.25 மணியளவில் சந்திர கிரகணம் முடிவுற்றது.

PTI

கிட்டத்தட்ட 85 நிமிடங்களுக்கு நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் அடா் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

மேலும், இதேபோன்ற ஒரு சந்திர கிரகணத்தைக் காண வேண்டும் என்றால், அது 2028 டிசம்பா் 31-ஆம் தேதிதான் நிகழும் என்று அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை வீட்டிலிருந்தே மக்கள் வெறும் கண்களால் பார்த்து வியப்பில் மகிழ்ந்தனர்.

Summary

Rare Blood Moon witnessed by millions across the world

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com