
சென்னை, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக வந்த மின்னஞ்சல் மூலமாக வந்த தகவலின்பேரில், மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தலைமைச் செயலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
தலைமைச் செயலகம் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தி.நகர் அருகேயுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஈஞ்சம்பாக்கத்தில் உள் தனியார்ப் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.