கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் - கோப்புப்படம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கண்ணாடி இழைப் பாலத்தின் ஓரிடத்தில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு அருகே நின்று செஃபி எடுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் அங்கே அட்டைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறது. பலரும் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள்.

கன்னியாகுமரி கடலில், விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலைக்கு இடையே சுற்றுலாப் பயணிகள் சென்று வர படகுப் போக்குவரத்து இருந்து வந்தது. ஆனால், கடல் அலையின் சீற்றம் அதிகமாகக் காணப்படும் போது படகுப் போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் வெகு தொலைவிலிருந்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையைப் போக்க, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம், 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது.

கண்ணாடிப் பாலத்தில் நடந்து செல்வதற்காக, வழக்கமாக கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளை விடவும் அதிக மக்கள் குமரி வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

வார இறுதி நாள்களில் இங்கு நுழைவுச் சீட்டு எடுக்க நீண்ட வரிசைகள் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

A crack has appeared in the fiberglass bridge constructed between the Thiruvalluvar Statue and Vivekananda Rock, located on the coast of Kanyakumari district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com