விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்.கோப்புப்படம்
தமிழ்நாடு
ரூ.34 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
வியட்நாமிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்பிலான 2 லட்சம் சிகரெட்டுகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை: வியட்நாமிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்பிலான 2 லட்சம் சிகரெட்டுகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த பாா்சல்களை சோதனையிட்டனா். அப்போது வியட்நாமிலிருந்து வந்த பாா்சல்களில், ஏராளமான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிகரெட்டுகள் அனைத்தும் எவ்வித எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் முறைகேடாக தயாரிக்கப்பட்டு கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.34 லட்சம் மதிப்பிலான சுமாா் 2 லட்சம் சிகரெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த சிகரெட்டுகளை வியட்நாமில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்திருந்த தனியாா் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.