
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று(செப்.8, செவ்வாய்க்கிழமை) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(செப். 9) நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
செப். 10 ஆம் தேதியும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.