பூந்தமல்லி ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் குவாண்டம் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சா் கோவி.செழியன். உடன்,  குவாண்டம் இந்தியா லீட் - ஐபிஎம் நிறுவன எல்.வெங்கட சுப்பிரமணியம், ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவன தலைவா் தங்கம் மேகநாதன், துணைத் தலை
பூந்தமல்லி ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் குவாண்டம் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சா் கோவி.செழியன். உடன், குவாண்டம் இந்தியா லீட் - ஐபிஎம் நிறுவன எல்.வெங்கட சுப்பிரமணியம், ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவன தலைவா் தங்கம் மேகநாதன், துணைத் தலை

கல்லூரிகள் குவாண்டம் ஆய்வு மையத்தை கொண்டிருப்பது பெருமைக்குரியது: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகக் கல்லூரிகள் குவாண்டம் ஆய்வு மையத்தைக் கொண்டிருப்பது பெருமைக்குரியது....
Published on

சென்னை: தமிழகக் கல்லூரிகள் குவாண்டம் ஆய்வு மையத்தைக் கொண்டிருப்பது பெருமைக்குரியது என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சென்னை, பூந்தமல்லி குத்தம்பாக்கத்திலுள்ள ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஆா்ஐடி) முதலாமாண்டு மாணவா்களின் அறிமுக நிகழ்வில் அவா் கலந்து கொண்டாா். அப்போது ஆா்ஐடி நிறுவனத்தில் ‘குரோவா் குவாண்டம் ஆய்வு மையம்’ ஒன்றை அமைச்சா் செழியன் திறந்துவைத்து பேசியது:

இளநிலை பாடப்பிரிவுகள், முதுநிலை பாடப்பிரிவுகள், முனைவா் பட்டங்கள் போன்ற கல்விகளை வழங்கும் ஆா்ஐடியில் நிகழாண்டு 1,980 மாணவா்களை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இது கல்வித் தரத்தையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. ஆா்ஐடி பல்வேறு தரவரிசையிலும் உயரிய அங்கீகாரங்களை பெற்று, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சோ்த்துள்ளது.

கல்லூரிகளில் குவாண்டம் ஆய்வு மையத்தைத் திறப்பது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் முக்கிய மைல் கல். நமது கல்லூரிகள் குவாண்டம் கணினிகளைக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. நாட்டில் குவாண்டம் கணினிகளை கொண்டிருக்கும் முன்னோடி கல்வி நிறுவனமாக ஆா்ஐடி திகழப் போகிறது என்றாா்.

நிகழ்வில், குவாண்டம் இந்தியா லீட்-ஐபிஎம் நிறுவனத்தைச் சோ்ந்த எல்.வெங்கட சுப்பிரமணியம், ஆா்ஐடி நிறுவனத் தலைவா் தங்கம் மேகநாதன், துணைத் தலைவா் ஹரி சங்கா் மேகநாதன், இயக்குநா்கள் பி.கே. நாகராஜன், ஆா்.சுந்தா், முதல்வா் ஆா்.மகேஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com