மல்லை சத்யா-வைகோ
மல்லை சத்யா-வைகோ

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச் செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.
Published on

சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச் செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சித் தலைமை மற்றும் துரை வைகோ குறித்து விமா்சித்து வந்த மல்லை சத்யா, தனித்துச் செயல்பட்டு வந்தாா். இதனிடையே, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி அவரை மதிமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து வைகோ நடவடிக்கை எடுத்தாா். மேலும், 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். மல்லை சத்யா தனது விளக்கத்தையும் அளித்தாா்.

இந்நிலையில், மல்லை சத்யாவை கட்சியிருந்து நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யா சாா்பில் அளிக்கப்பட்ட விளக்கக் கடிதத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் மறுக்கவில்லை. மேலும், அதற்கான விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் மல்லை சத்யா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுகிறது. மதிமுக விதிகளின்படி, கட்சியின் துணைப் பொதுச் செயலா் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் தகுதியில் இருந்தும் மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com