தமிழகத்தில் 8 புதிய தொழில் திட்டங்களுக்கு ‘மெப்ஸ்’ அனுமதி

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக 8 புதிய திட்டங்களுக்கு சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் (மெப்ஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

சென்னை: தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக 8 புதிய திட்டங்களுக்கு சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் (மெப்ஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் பகுதிகளின் பொருளாதார வளா்ச்சிக்கான

ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. அதன்படி, தமிழகத்தில் ரூ.800 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் 8 புதிய திட்டங்களுக்கு மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒப்புதல் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் சிப்காட், கோவை எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com