
காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்த நிலையில், ஒரு தலைவராக மாபெரும் தோல்வியை அவர் தழுவியிருப்பதாக மல்லை சத்யா கருத்து கூறியிருக்கிறார்.
எப்போதும் மகனைப் பற்றியே வைகோ சிந்திக்கிறார், என்னை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியதன் மூலம், ஒரு தலைவராக மாபெரும் தோல்வியைத் தழுவியிருக்கிறார் வைகோ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதிமுகவிலிருந்து மல்லை சத்யா இன்று நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின், சென்னை வருகை செய்திகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இன்று என்னை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வைகோ, பாஜகவுடன் கள்ளக் கூட்டணியும் வைத்துள்ளதாக மல்லை சத்யா குற்றச்சாட்டியிருக்கிறார்.
அதாவது, முதல்வர் வெளிநாடுகள் சென்று முதலீடுகளை பெற்று வெற்றிகரமாக திரும்பி சென்னை வந்த இந்த நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் பெரிய அளவில் வரக்கூடாது என்பதற்காகவ், அதனைத் தவிர்க்க தற்போது என்னை நிரந்தரமாக நீக்கியதாக வைகோ அறிவித்துள்ளார். மேலும் வைகோ பாஜகவுடன் கள்ளக் கூட்டணியும் வைத்துள்ளார் எனத் தெரிவித்தார்.
வரும் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் காஞ்சிபுரம் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க.... தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.