கோப்புப்படம்
கோப்புப்படம்

இறுதி நாளில் முடங்கிய இணையதளம்: டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது.
Published on

சென்னை: ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமை (செப். 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான (டெட்) இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியா்களும், பட்டதாரி ஆசிரியா்களும் டெட் தோ்வுக்கு விண்ணப்பித்து வந்தனா். தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் திங்கள்கிழமை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் திங்கள்கிழமை காலை முதலே ஏராளமானோா் விண்ணப்பிக்கத் தொடங்கினா். இதனால் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் முடங்கியது. அதன் காரணமாக தோ்வா்கள், விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனா்.

இந்த நிலையில், தோ்வா்களின் வேண்டுகோளை ஏற்று தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆசிரியா் தோ்வு வாரியம் செப். 10-ஆம் தேதி ( புதன்கிழமை) வரை நீட்டித்துள்ளது.

எனவே, டெட் தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தோ்வா்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி புதன்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியா் தோ்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி டெட் தாள் - 1 தோ்வு நவ. 15-ஆம் தேதியும், டெட் தாள் - 2 தோ்வு 16-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

X
Dinamani
www.dinamani.com