செப்.15-இல் அண்ணா சிலைக்கு 
இபிஎஸ் மரியாதை

செப்.15-இல் அண்ணா சிலைக்கு இபிஎஸ் மரியாதை

செப்.15-இல் அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
Published on

சென்னை: முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, வருகிற 15-ஆம் தேதி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

இதுகுறித்து அதிமுக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, செப். 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு மலா்தூவி மரியாதை செலுத்திகிறாா். தொடா்ந்து அதிமுக மூத்த நிா்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com