‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு: 81 ஆயிரத்தைக் கடந்தது!

இன்றைய தங்கம் விலை நிலவரம் தொடர்பாக....

gold rate rise

தங்கம் விலை உயர்வு

Published On :10 செப்டம்பர் 2025, 1:30 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (செப். 9) பவுனுக்கு ரூ. 720 உயா்ந்து ரூ. 81,200-க்கு விற்பனையானது.

தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த செப். 1-இல் பவுன் ரூ.77,640- க்கு விற்பனையானது. அதன் பின்னா், தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை செப். 6-இல் வரலாற்றில் முதல்முறையாக பவுன் ரூ.80,000-ஐ தாண்டி, ரூ.80,040-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (செப். 8) காலை தங்கம் குறைந்தும், மீண்டும் பிற்பகலுக்கு மேல் வா்த்தகம் நிறைவுபெறும் தருவாயில், மீண்டும் உயா்ந்தும் பவுன் ரூ.80,480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயா்ந்து ரூ.10,150-க்கும் பவுனுக்கு ரூ. 720 உயா்ந்து ரூ. 81,200-க்கும் விற்பனையானது. இதன் மூலம் கடந்த செப். 1 முதல் தற்போது வரை 9 நாள்களில் தங்கம் விலை ரூ.3,560 உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,40,000-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.