மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலி

News image
Updated On :10 செப்டம்பர் 2025, 5:40 am

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையிலல் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் பூவன்கிழவன்பட்டியில் தங்கிவிட்டு, இன்று காலை வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு பணிக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பகுதியில் சாலை கடக்க முற்பட்டபோது, திண்டுக்கலில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பாலசுப்பிரமணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூற்பாலை பணிக்காக சென்ற இருவர் அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.