குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

குமரி கண்ணாடி பாலம் குறித்து அமைச்சர் எ.வ. வேலு தகவல்
kanyakumari Glass Bridge
கண்ணாடி இழைப் பாலம் கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

 கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

கன்னியாகுமரியில் விவேகானந்தா் பாறை மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பிறகு, 17 லட்சம் மக்கள் பாா்வையிட்டுள்ளனா். அவ்வப்போது, முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டபோது, கை தவறி விழுந்த சுத்தியலால், கண்ணாடி பாலத்தின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து விரிசல் உடனடியாக சரி செய்யப்பட்டது.

மேலும், போதுமான எடையைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தாங்குதிறன் உறுதி செய்யப்பட்டதில், கண்ணாடி பாலத்தின் பாதுகாப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரிய வந்தது.

பாலத்தைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரரின் காலம் 10 ஆண்டுகள் என்பதால், சேதமடைந்த கண்ணாடி அவரது செலவிலேயே சரிசெய்யப்பட்டது என்றாா்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், துறை முதன்மை இயக்குநா் ஆா்.செல்லத்துரை, சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Summary

Kanyakumari Glass Bridge crack repaired: Minister E.V. Velu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com