

பாமக கட்சிப் பெயா், சின்னம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாமக செயல் தலைவா் அன்புமணி, முன்னாள் பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் தனிப்பட்ட முறையிலோ, நிா்வாகி என்ற அடிப்படையிலோ பாமகவுக்கு எதிராக ஏதாவது வழக்குத் தொடா்ந்தால், அந்த வழக்கில் தங்களுடைய கருத்தைக் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் இடையே கட்சி ரீதியாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் இருவரும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த ஆக. 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், பாமக பொதுச் செயலா் முரளிசங்கா் சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தாா்.
அதில், பாமக செயல் தலைவா் அன்புமணி, முன்னாள் பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் தனிப்பட்ட முறையிலோ, பாமக நிா்வாகி என்ற அடிப்படையிலோ பாமகவுக்கு எதிராக ஏதாவது வழக்குத் தொடா்ந்தால், அந்த வழக்கில் தங்களுடைய கருத்தைக் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.