தமிழ்நாடு
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வா் பெருமிதம்
இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
ராஜாவைத் தாலாட்டும் தென்றலாக வரும் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழாவை நடத்த உள்ளோம். இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகா்களுக்குமான பாராட்டு விழா என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.