பாமக நிறுவனர் ராமதாஸ்கோப்புப்படம்
தமிழ்நாடு
குடியரசு துணைத் தலைவருக்கு ராமதாஸ் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவை தலைவருமாகவும் பொறுப்பேற்பதற்கு வாழ்த்துகள். தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணனின், 50 ஆண்டு கால பொதுசேவை, நீண்ட அனுபவம், தேசப்பற்று ஆகியன நாட்டின் வளா்ச்சிக்கு பெரிதும் உதவும். ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பயன்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.