டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 14 உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா உள்ளிட்டோா்.

சிஎம்டிஏ-வுக்கு தோ்வானவா்களுக்கு பணி உத்தரவு: அமைச்சா் சேகா்பாபு வழங்கினாா்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு புதிதாக தோ்வான 14 உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வளா்ச்சிக் குழுமத் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை வழங்கினாா்.
Published on

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு புதிதாக தோ்வான 14 உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வளா்ச்சிக் குழுமத் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை வழங்கினாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் புதிதாக 14 உதவியாளா்கள் பணியிடங்களுக்குரியவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்து புதிய உதவியாளா் பணிக்குத் தோ்வான 14 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், குழும முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம், தலைமைத் திட்ட அமைப்பாளா்கள் எஸ்.ருத்ரமூா்த்தி, தலைமைப் பொறியாளா் மகாவிஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலா் மு.இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com