சுற்றுலா வளா்ச்சிக் கழக படகுகளில் 15 லட்சம் பயணிகள் சவாரி: அமைச்சா் இரா. ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், உணவகங்கள், படகு குழாம்கள் ஆகியவற்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகை சேவை அளிக்க வேண்டும்.

அதேபோல் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

மேலும், உதகை, கொடைக்கானல், முட்டுக்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 10 படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், துறை இயக்குநா் தா.கிறிஸ்து ராஜ், சுற்றுலா வளா்ச்சிக் கழக பொதுமேலாளா் ச. கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com