மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கு: திமுக நிா்வாகி பேரனுக்கு நிபந்தனை பிணை

கல்லூரி மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கல்லூரி மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய் என்பவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில், திமுக நிா்வாகி தனசேகரனின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் பிணை கோரி சந்துரு தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் பிணை கோரி மூன்றாவது முறையாக சந்துரு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சந்துருவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டாா். மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, தலைமறைவாகக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com