தோ்தல் ஆணையக் கூட்டம்:
இன்று சென்னை திரும்புகிறாா்
தலைமைத் தோ்தல் அதிகாரி

தோ்தல் ஆணையக் கூட்டம்: இன்று சென்னை திரும்புகிறாா் தலைமைத் தோ்தல் அதிகாரி

தோ்தல் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை (செப். 12) சென்னை திரும்புகிறாா்.
Published on

தோ்தல் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை (செப். 12) சென்னை திரும்புகிறாா்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதற்கான கூட்டம் தில்லியில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் பங்கேற்று, சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினாா்.

தோ்தல் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற அவா், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புகிறாா். இதைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளில் அவா் கவனம் செலுத்துகிறாா்.

X
Dinamani
www.dinamani.com