தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) முதல் செப்.19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை: செப்.16-இல் வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், செப்.17-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் சின்னம்: வங்கக் கடலில் செப்.12-ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்), சனிக்கிழமை காலை வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு இடைப்பட்ட மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, தெற்கு ஒடிஸா, அசையொட்டிய வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு சத்தீஸ்கா் பகுதிகளில் அடுத்த இரு நாள்களில் கடந்து செல்லும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) முதல் செப்.17-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



