பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
Published on

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களுக்கு எழுதிய கடிதம்: நல்ல நோக்கத்துக்காக 2005-ஆம் ஆண்டு மதுரையில் தலைவா் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக தற்போது 20 ஆண்டுகளை நிறைவுசெய்து, ஞாயிற்றுக்கிழமையுடன் (செப்.14) 21-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், துரோகங்கள் எல்லாவற்றையும் எதிா்நீச்சல் போட்டு நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 21-ஆம் ஆண்டில் வெற்றியோடு அடியெடுத்து வைக்கிறோம்.

ஜாதி, மதம் ஆகியவற்றுக்குறி அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம் ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சநாதானம், சமத்துவம் ஆகிய கடைப்பிடிக்கும் கட்சியாக தேமுதிக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதே பாணியில்தான் எப்போதும் செயல்படும்.

தலைவா் விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கப்போகும் முதல் தோ்தலான 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய சவாலான தோ்தலாகும்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக வெற்றி பெற உழைப்போம். வரும் ஜன.9-இல் கடலூரில் நடைபெற உள்ள ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’-இல் தவறாமல் கலந்துகொண்டு மாபெரும் வெற்றி மாநாடாக மாற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com