
இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரைத்துறை பயணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,
“நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் - இளையராஜா. உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் ரத்தம், நாடி, உயிரிலும் இளையராஜாவின் இசை கலந்துள்ளது. 50 வருடங்களில் 1,600 படங்கள், 8,000 பாடல்கள் என்பது சாதாரண விஷயமல்ல.
எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் என்று சொல்வார். ஆனால், கமலஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. சகோதரருக்கு சிந்தாத கண்ணீர், மனைவிக்கு சிந்தாத கண்ணீர், மகளுக்கு சிந்தாத கண்ணீர், நண்பர் எஸ்.பி.பி.க்கு சிந்தியது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, கார்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.