
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நடிகர் விஜய், திருச்சியில் இன்று தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கினார். முதல் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், அவரது மைக் கோளாறு ஏற்பட்டு, விஜய் பேசுவது புரியாமல் போனது.
இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த தவெக தலைவர் விஜய், பிரத்யேக வாகனத்தில் புறப்பட்டு திருச்சி மரக்கடைப் பகுதிக்கு பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தார்.
மரக்கடைப் பகுதியில் அரசுப் பள்ளி அருகே, பிரத்யேக வாகனத்தின் மீது நின்றவாறு விஜய் பேசத் தொடங்கினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் பேசுவது தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு சில வினாடிகளில் அவர் பேசுவது புரியாத வகையில் மைக்கில் கோளாறு ஏற்பட்டது.
ஏற்கனவே, விஜய் பேசும் இடத்தில் சுற்றி நிற்கும் தவெக தொண்டர்களின் ஆரவாரத்தால் அப்பகுதியில் சப்தம் அதிகமாக இருக்கும் நிலையில், விஜய் பேசும் மைக்கில் ஏற்பட்ட கோளாறால், விஜய் என்ன பேசுகிறார் என்பது அங்கிருக்கும் யாருக்கும் சரியாகக் கேட்கவில்லை.
காலை முதல், ஊடகங்கள் வாயிலாக விஜய் பேசுவதைக் கேட்கக் காத்திருந்தவர்களுக்கும், விஜய் என்ன பேசுகிறார் என்று புரியாமல், வெறும் சப்தம் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் அதிருப்தி அடைந்தனர். முதலில் ஒரு மைக்கில் அவர் பேசிக் கொண்டிருந்தார். பிறகு வேறொரு மைக்கில் பேசத் தொடங்கியபோது அங்கிருந்த ஸ்பீக்கர்கள் வேலை செய்யாமல் போனது. அவர் பேசுவது அங்கிருந்தவர்களுக்கும் கேட்கவில்ல. நேரலையில் பார்த்தவர்களுக்கும் கேட்கவில்லை.
ஆனால், விஜய் ஆற்றிய உரையில், திருச்சியின் சில உள்ளூர் பிரச்னைகளைப் பற்றியும், திமுக ஆட்சிக்கு வரும் முன் அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியும் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு வாக்களிப்பீர்களா என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் விஜய் கேட்டார். அதற்கு மாட்டோம், மாட்டோம் என்று ஆதரவாளர்கள் கத்தினர்.
பிறகு, மைக் சரியாக வேலை செய்யாததால், தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் விஜய். காலை 10.30 மணிக்கு விஜய் வருவார் என காலை முதல் காத்திருந்த தொண்டர்களுக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு பேசத் தொடங்கினார். மைக் வேலை செய்யாததால் 20 முதல் 25 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார்.
இதையும் படிக்க.. குற்றங்களே நடக்காத கிராமம்! காவல்நிலையத்தை பார்த்ததே இல்லையாம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.