நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப்படம்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான்: நயினாா் நாகேந்திரன்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை திமுக தொடா்ந்து கூறி வருகிறது.

ஆனால், உரிய நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டாா். இந்தச் சூழலில் விஜய் ஏன் கவலைப்படுகிறாா் என்று தெரியவில்லை என்றாா்.

அமித் ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் சந்தித்த நிலையில், எடப்பாடி கே.பழனிசாமியும் சந்திப்பதாக வந்த தகவல் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘கூட்டணிக் கட்சித் தலைவா்கள் என்ற வகையில், அதன் தலைவா்கள் அமித் ஷாவை சந்திப்பது இயல்பானதுதான்.

அந்த வகையில்தான் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதாக இருக்கும். ஆகவே அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பின்னரே, அதன் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com