மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருச்சியில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மதிமுக மாநாட்டு மேடையில்...
மதிமுக மாநாட்டு மேடையில்...படம் - மதிமுக
Published on
Updated on
1 min read

திருச்சியில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில், 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

உடனடியாக கீழடி ஆய்வு முடிவுகள் வெயிடப்பட்டு அங்கீகாரம் வழங்க வேண்டும்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிவாகை சூடிட மறுமலர்ச்சி திமுக பணியாற்றும்.

பிகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் வாக்காளர் தீவிர திருத்தம் நடைபெறும். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள வெளி மாநிலத்தவர்களும் தமிழக வாக்காளர் பட்டியலில் இணையும் சூழல் ஏற்படும். வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை கொடுக்கும்பட்சத்தில் அதில் பாஜக ஆதாயம் அடையும். இதனை முறியடிக்க வேண்டும்.

ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால், பதவி பறிக்கும் வகையிலான மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்ததால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடு கட்ட வேண்டும்

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தண்டணைக்கு உள்ளாக்கப்படுவதும், லட்சகணக்கான ரூபாய்களை அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் துணி உற்பத்தி ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், சமஸ் கிருத மொழிதான் எல்லா மொழிகளுக்கும் தாய் என்ற கூறி இருப்பதும், சமஸ்கிருத மொழியை தொடர்பு மொழியாக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கும் கண்டனம்.

மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு மத்திய அரசு அனுமதியை ரத்து செய்யக்கோரி வேளாண் மக்கள் போராட்டக்களத்திற்கு தயாராக வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Summary

12 resolutions passed at MDMK conference!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com